முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணிப்பேட்டையில் புதிய வாகன உற்பத்தி ஆலை : முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2024      தமிழகம்
CM-1 2024-03-28

Source: provided

சென்னை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலைக்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.

புதிய தொழிற்சாலைகள் மூலம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் குழுமம், தமிழக  அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. 

ரூ. 9,000 கோடியில் கார் தயாரிப்பு ஆலையை நிறுவ கடந்த மார்ச் மாதம் முதல்வர்  மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. தொழிற்சாலைகள் நிறைந்துள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில் தான் இந்த நிறுவனத்தின் ஆலை அமையவுள்ளது. 

பனப்பாக்கத்தில் உள்ள புதிய சிப்காட் வளாகத்தில், தோல் தொழில் அல்லாத முதல் தொழிற்சாலை இதுவாகும். 470 ஏக்கர் பரப்பில் அமையும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.  

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், டி.ஆர்.பி. ராஜா, ஆர்.காந்தி, டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கடந்த 1969 ஆம் ஆண்டு டாடா நிறுவனர் ஜே.ஆர்.டி. டாடாவுடன், தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், தி.மு.க.வின் முன்னாள் தலைவருமான கருணாநிதி இருக்கும் புகைப்படத்தை முதல்வர் ஸ்டாலினுக்கு, டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் அன்பளிப்பாக வழங்கினார். 

கார் உற்பத்தி ஆலை மூலம் 5,000 பேர் நேரடியாகவும், 15,000 பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறவுள்ள நிலையில், உள்ளூர் பகுதி மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. 

சிப்காட் வளாகத்தில் 470 ஏக்கர் பரப்பளவில் ஆலையை அமைக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர்களின் மின்சாரக் கார்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. ராணிப்பேட்டை ஆலை மின்சாரக் கார் உற்பத்தியில் முக்கிய மையமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து