முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி லட்டு விவகாரம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2024      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடெல்லி : திருப்பதி பிரசாத லட்டு விவகாரத்தில் கடவுளை  அரசியலுக்காக பயன்படுத்த கூடாது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.  

ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி இருந்த போது, திருப்பதி லட்டு தயாரிக்க கொள்முதல் செய்யப்பட்ட நெய், கலப்படமானதாக இருந்ததாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டி இருந்தார். 

மீன் எண்ணெய், விலங்குகளின் கொழுப்பு உள்ளிட்டவை கலக்கப்பட்ட நெய் கொள்முதல் செய்யப்பட்டது ஆய்வக பரிசோதனையில் உறுதியாகி இருப்பதாக ஆந்திர அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  

இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஜெகன் மோகன் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும், திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவருமான ஒய்.வி.சுப்பா ரெட்டி, வரலாற்றாசிரியர் விக்ரம் சம்பத், ஆன்மிக சொற்பொழிவாளர் துஷ்யந்த் ஸ்ரீதர் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.

இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. நீதிபதிகள் பி.ஆர்.கவாய், விஸ்வநாதன் ஆகியோர் வழக்கை விசாரித்தனர். ஆந்திரப் பிரதேச அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகியும், திருமலா திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வழக்கறிஞர் சித்தார்த் லுத்ராவும் ஆஜராகினர்.

அப்போது, லட்டு தயாரிப்புக்கு நெய் உரிய தரத்தில் இல்லாத போது சோதனைக்கு அனுப்பினோம். 2-வது முறையும் சோதனைக்கு அனுப்பினோம். பின்னர் ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டது  என ஆந்திர அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

இதையடுத்து, ஆந்திர முதல்வர்  சந்திரபாபு நாயுடுவுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்து சரமாரியாக கேள்வி எழுப்பினர். அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

திருப்பதி லட்டு விவகாரத்தில் ஏற்கனவே விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கும் போது, முதல்வர் என்ற பொறுப்பான பதவியில் இருக்கும் நீங்கள், ஏன் இந்த விவகாரத்தை நேரடியாக ஊடகங்களிடம் எடுத்துச் சென்றீர்கள்? 

எஸ்.ஐ.டி. குழுவின் அறிக்கை கிடைப்பதற்கு முன் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க வேண்டிய அவசியம் என்ன?  லட்டு பிரசாதம் தொடர்பான ஆய்வு முடிவுகள் ஜூலையில் வந்த நிலையில் செப்டம்பர் மாதம் வெளியிட்டது ஏன்?.

மேலும், திருப்பதி லட்டு பிரசாதத்தில் நீங்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெளிவானதாக இல்லை. ஆய்வு மாதிரியில் பயன்படுத்தப்பட்ட நெய்தான் லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது என இதில் குறிப்பிடப்படவில்லை. 

திருப்பதி லட்டு விவகாரத்தில்  கடவுளை அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது. மத உணர்வுகளை மதிக்க வேண்டும், என நீதிபதிகள் தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து