முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழைநீர் கால்வாயில் விழுந்து ஒருவர் உயிரிழந்ததற்கு நிர்வாக சீர்கேடே காரணம்: எடப்பாடி

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2024      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : மழைநீர் கால்வாயில் விழுந்து ஒருவர் உயிரிழந்ததற்கு நிர்வாகச் சீர்கேடே காரணம் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். 

இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

சென்னை, அசோக் நகரில் சாலையோரம் உரிய வழிமுறைகளை பின்பற்றாமல், முறையாக தடுப்புகள் வைக்கப்படாத நிலையில் இருந்த, மழைநீர் கால்வாயில், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் தவறி விழுந்து மரணமடைந்துள்ளார். 

இந்த துயர சம்பவத்திற்கு ஸ்டாலினின் தி.மு.க. அரசின் சென்னை மாநகராட்சியின் நிர்வாகச் சீர்கேடே  காரணம். இம்மரணத்திற்கு தமிழக மக்கள் மீது சிறிதும் அக்கறையில்லாத  முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும்.

இறந்தவர் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் அரசு நிவாரணம் வழங்கவும், தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், இனி இதுபோன்ற நிகழ்வு எங்கும் நடைபெறா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் தி.மு.க. முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த பதிவில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து