தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவமனையில் உத்தவ் தாக்கரே

திங்கட்கிழமை, 14 அக்டோபர் 2024      இந்தியா
hospital

Source: provided

மும்பை: மராட்டிய முன்னாள் முதல்வரும், உத்தவ் சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மராட்டிய முன்னாள் முதல்வரும், உத்தவ் சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இதயம், தமனிகளில் அடைப்புகள் இருக்கிறதா என மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது.

முன்னதாக உத்தவ் தாக்ரேவுக்கு இதய தமனிகளில் அடைப்பு இருப்பது கடந்த 2012ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு இதயத்தில் ஸ்டன்ட் பொருத்தப்பட்டிருந்தது. பின்னர் 2016ம் ஆண்டும் இதேபோல ஆஞ்சியோ செய்யப்பட்டது. இந்த சூழலில் கடந்த 12ம் தேதி தசரா விழாவில் அவர் பங்கேற்றிருந்தார். அதன் பிறகு அவருக்கு திடீர் உடல் நலப்பிரச்னை ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த ஆண்டு இறுதியில் 288 இடங்களைக் கொண்ட மராட்டிய சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் அதிகாரப்பூர்வ தேர்தல் அட்டவணையை அறிவிக்கவில்லை. இதனிடையே இந்த தேர்தலில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் உத்தவ் தாக்கரே உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து