முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு

சனிக்கிழமை, 19 அக்டோபர் 2024      தமிழகம்
MRK 2024-10-19

Source: provided

கடலூர் : மழை காரணமாக வேகமாக நிரம்பி வரும் காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரியை  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் .

கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீர் ஆதாரமாக இருப்பது காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி ஆகும். இந்த ஏரி மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி வட்டப் பகுதியில் 44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசனம் பெறுகின்றன. 

இதன் மூலம் இப்பகுதி விவசாய மற்றும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடியாகும். காவிரி தண்ணீர் கீழணையில் இருந்து வடவாறு வழியாக ஏரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஏரி நிரப்பப்படும். 

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கடலூர் மாவட்ட பகுதிகளும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிக்கு காட்டாறுகள் மூலம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 

கீழணையில் இருந்து வடவாறு மூலமாகவும் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரி நிரம்பி முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியுள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வீராணம் ஏரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சிதம்பரம் நீர்வளத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து