முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேலை இந்திய அரசு ஆதரிப்பதற்கான காரணம் : கேரள முதல்வர் பினராயி விஜயன் விளக்கம்

திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2024      இந்தியா
Pinarayi-Vijayan 2024 10 21

Source: provided

திருவனந்தபுரம் : அமெரிக்காவை திருப்திப்படுத்தவே இஸ்ரேலை இந்திய அரசு ஆதரிக்கிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததாக இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டுவரும் ஹமாஸ் அமைப்பு கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி முன்னெப்போதும் இல்லாத மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலை நோக்கி ஆயிரக்கணக்காக ராக்கெட்டுகள் சரமாரியாக பாய்ந்தன. தரைவழியாக ஊடுருவியும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும் சுமார் 250 பேர் பணய கைதிகளாக பிடிப்பித்துச்செல்லப்பட்டனர். இதனைத்தொடர்ந்து பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் கடந்த ஒரு வருடமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பெண்கள் குழந்தைகள் உட்பட 41 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இஸ்ரேலின் தாக்குதலை பெயரளவில் கண்டித்தாலும் இந்த விவகாரத்தில் இந்தியா எந்த நாட்டிற்கும் ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலைமை வகிக்கிறது.

இந்நிலையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை திருப்திப்படுத்தவே பாலஸ்தீனத்திற்கு பதிலாக இஸ்ரேல் நாட்டை இந்திய அரசு ஆதரித்து வருகிறது என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற சி.எச்.கனராம் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய பினராயி விஜயன் இவ்வாறு தெரிவித்தார்.

பொதுக்கூட்டத்தில் பேசிய பினராயி விஜயன், "இஸ்ரேல் மற்றும் நம் நாட்டில் அதிகாரத்தில் இருப்பவர்களும் உடன் பிறந்தவர்கள் போன்றவர்கள். இருவரில் ஒருவரின் பெயர் சியோனிஸ்டுகள் மற்றொருவரின் பெயர் சங் பரிவார். இந்த 2 பேருக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை நிறுத்த சொல்லி ஐநா சபையில் உள்ள பெரும்பாலான நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. அமெரிக்கா போன்ற சில நாடுகள் மட்டுமே இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளன.

இதில் மகத்தான வரலாற்றை கொண்ட நம் நாடு எங்கே இருக்கிறது? இப்பிரச்சனையில் ஐநா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நாம் நடுநிலைமை வகிக்கிறோம். நாம் பாலஸ்தீனத்தின் பக்கம் இல்லை. பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை நிறுத்தக் கோரும் குழுவில் நாம் இல்லை. அதன் பொருள் நாம் இஸ்ரேல் பக்கம் நிற்கிறோம்.

இத்தாலி போன்ற பல நாடுகள் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த முடிவு செய்தாலும், இந்தியா இன்னும் அதை நிறுத்தவில்லை. இஸ்ரேலுடன் அதிக ஆயுத வியாபாரம் செய்யும் நாடு இந்தியா தான். இஸ்ரேல் விரும்பும் ஆயுதங்களை தயாரிக்கும் பூமியாக இந்தியா மாறியுள்ளது. பாலஸ்தீனத்தில் நடப்பது போர் அல்ல, இனப்படுகொலை. 2 தரப்பினரிடமும் போதுமான ஆயுதங்கள் இருந்தால் தான் அதை போர் என்று அழைக்க முடியும். இஸ்ரேல் எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்துகிறார்கள், இது ஒருதலைபட்சமான தாக்குதல்" என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து