முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்புக்கு பெருகும் ஆதரவு : இறுதிகட்ட கருத்துக்கணிப்பில் தகவல்

செவ்வாய்க்கிழமை, 22 அக்டோபர் 2024      உலகம்
Trump 2023-04-13

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு திடீரென ஆதரவு பெருகி உள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்க அதிபர் தேர்தல்  நவம்பர் 5-ம் தேதி நடைபெறவுள்ளதால், குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளரும், துணை அதிபருமான கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், டெசிஷன் டெஸ்க் ஹெச்குயூ-தி ஹில் என்ற நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பின்படி முன்னாள் அதிபர் டிரம்புக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும், அவருக்கு 52 சதவீத வாக்குகள் பெற்று முன்னிலை வகிப்பதாகவும் தெரிவித்துள்ளது. 

அதே நேரம் துணை அதிபரான கமலா ஹாரிஸுக்கு 42 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது. மிச்சிகன், விஸ்கான்சின், அரிசோனா, ஜார்ஜியா மற்றும் வட கரோலினா மாநிலங்களில் டிரம்புக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.

ஜனநாயக கட்சியினருக்கும், குடியரசு கட்சியினருக்கும் சமபங்கு ஆதரவு ஏழு மாநிலங்களில் உள்ளதாகவும், பென்சில்வேனியாவில் மட்டும் கமலா ஹாரிஸ் முன்னிலை பெற்றுள்ளதாகவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் நடந்த கணக்கெடுப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலை வகித்து வந்தார். கமலாவுக்கு 54 முதல் 56 சதவீத ஆதரவும், டிரம்புக்கு 44 முதல் 46 சதவீத ஆதரவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த மாத தொடக்கத்தில் இருந்தே டிரம்புக்கு ஆதரவு பெருகி வருவதால், வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள அமெரிக்க தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து