முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

செவ்வாய்க்கிழமை, 22 அக்டோபர் 2024      உலகம்
Modi 2024-10-22

Source: provided

மாஸ்கோ : பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்யா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு பிரிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கூட்டமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சிமாநாடு ரஷ்யாவின் தலைமையில் நடைபெற உள்ளது. 

ரஷ்யாவின் கசான் நகரத்தில் நேற்றும், இன்றும் 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது.  அந்த வகையில் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்திருந்தார். புடினின் அழைப்பை ஏற்று மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நேற்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். 

இந்நிலையில் ரஷ்யா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  அங்கு கூடியிருந்த இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். விமான நிலையத்தில் பிரதமர் மோடி வந்த போது, அங்கு குவிந்திருந்த ரஷ்யர்களில் சிலர் கிருஷ்ண பஜனை பாடல்களைப் பாடி அசத்தினர். 

அதை தொடர்ந்து பிரிக்ஸ் தலைவர்களுடன் பிரதமர் மோடி விருந்தில் கலந்து கொண்டார். பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின்,  சீன அதிபர் ஜின் பிங் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.    

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில்,    இது ஒரு முக்கியமான உச்சிமாநாடு. இங்கே நடைபெறும் விவாதங்கள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு சிறந்த பங்களிப்பாக இருக்கும். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து