முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமித்ஷாவுக்கு பிறந்த நாள்: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 22 அக்டோபர் 2024      இந்தியா
Modi 2023 07 30

Source: provided

புதுடெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று  தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிலையில் அமித்ஷாவுக்கு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள்  பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பிறந்தநாள் வாழ்துகள் அமித்ஷா ஜி.  கடினமாக உழைக்கும் தலைவர் அமித்ஷா.  பா.ஜ.க.வை வலுப்படுத்த தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். 

அவர் விக்சித் பாரதத்தின் பார்வையை நனவாக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவரது நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா விடுத்துள்ள பதிவில், தேசத்திற்கான உங்கள் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் நிறுவன திறன்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும். தேசிய மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பில் உங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பு மறக்க முடியாதது என தெரிவித்துள்ளார்.

மத்திய  அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், அமித் ஷாவின் உள்நாட்டு மற்றும் தேசிய பாதுகாப்புக்கான முயற்சிகள் இந்தியாவை உலகளவில் வலிமையாகவும் சக்திவாய்ந்ததாகவும் மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வலுவான தலைமையின் கீழ், இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் பலப்படுத்தப்பட்டுள்ளதாக  மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்   வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வளமான,வலிமையான பாரதத்தை உருவாக்க உறுதி கொண்டு  பிரதமர்   மோடியின்  தோளோடு தோள் நின்று உலக நாடுகள் பாராட்டும் வகையில்  தீராத காஷ்மீர் எல்லை பிரச்சனை முதல் கன்னியாகுமரி வரை அகண்ட பாரதத்தை அரசியல் சாணக்கியத்துடன் முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்ற எங்களின் வழிகாட்டி பாரத தாயின் நம்பிக்கை நட்சத்திரம் மரியாதைக்குரிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார் .  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து