முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து: உமர் அப்துல்லாவிடம் உறுதி அளித்த அமித் ஷா

வியாழக்கிழமை, 24 அக்டோபர் 2024      இந்தியா
Amit-Shah---Omar-Abdullah-2

புது டெல்லி, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அமித்ஷாவை சந்தித்துள்ள நிலையில், மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என உமர் அப்துல்லாவிடம் மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு நீக்கியது. அத்துடன் மாநில அந்தஸ்தை ரத்து செய்து மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு-காஷ்மீரையும், லடாக்கையும் யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது.

ஜம்மு-காஷ்மீர் மாநில கட்சிகள் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில்தான் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேசிய மாநாடு கட்சி - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. உமர் அப்துல்லா முதல்வராக பதவி ஏற்றார்.

ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா நேற்று முன்தினம் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.  இந்த பேச்சுவார்த்தை சுமார் அரைமணி நேரம் நடைபெற்றது.  இருவருடைய சந்திப்பு மிகவும் சுமுகமாக சென்றுள்ளது.

அப்போது புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்கும். ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதற்கான செயல்பாடுகள் தொடங்கப்படும் என அமித் ஷா உமர் அப்துல்லாவுக்கு உறுதி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் புதிய அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது மாநில அந்தஸ்து வழங்க கோரிக்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து