முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செபி தலைவர் மாதவி ஆஜராகாததால் பாராளுமன்ற பொது கணக்கு குழு கூட்டம் ஒத்திவைப்பு

வியாழக்கிழமை, 24 அக்டோபர் 2024      இந்தியா
Parliament-1

புது டெல்லி, ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கம் அளிக்க செபி தலைவர் மாதபி புரி பூச், நேற்று பார்லி பொது கணக்கு குழு முன்பாக ஆஜராகவில்லை. இதனால் அக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

அதானி குழுமத்தின் சட்டவிரோத முதலீட்டு நிறுவனங்களில், பங்குச் சந்தை கட்டுப்பாட்டாளரான செபி அமைப்பின் தலைவர் மாதவி புரி புச், அவரது கணவர் தவல் புச் ஆகியோர் முதலீடு செய்திருப்பதாக, அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், அண்மையில் குற்றச்சாட்டு கூறியது. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என மாதவி மறுப்பு தெரிவித்தார்.

அதானி குழுமம் தொடர்பான முறைகேடு விசாரணையில் மாதவி ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக, எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டி இருந்தன. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி., தலைமையிலான பார்லிமென்ட் பொது கணக்கு குழு, மாதவி புரி புச் நேற்று  ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால், அவர் நேற்று விசாரணைக்கு ஆஜர் ஆகவில்லை.

அவர் ஆஜராக முடியாது என்பதை, கூட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக தகவல் சொல்லி இருக்கிறார். இது குறித்து பாராளுமன்ற பொது கணக்கு குழு தலைவர் வேணுகோபால் நிருபர்களிடம் கூறியதாவது, 

இன்று(நேற்று) காலை 9.30 மணியளவில், செபி தலைவர் மற்றும் பிற உறுப்பினர்களிடமிருந்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அவர் தனிப்பட்ட அவசரநிலை காரணமாக டெல்லிக்கு வர முடியாது என்ற தகவல் வந்தது. 

ஒரு பெண் விடுத்த கோரிக்கையைக் கருத்தில் கொண்டு,   கூட்டத்தை ஒத்திவைக்க முடிவு செய்தோம். மற்றொரு கூட்டம் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து