முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மீனவர்கள் 16 பேருக்கு 20-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு : இலங்கை நீதிமன்றம் உத்தரவு

புதன்கிழமை, 6 நவம்பர் 2024      தமிழகம்
Fisher-Man 2023-11-09

Source: provided

கொழும்பு : இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 தமிழக மீனவர்களுக்கு வரும் 20-ம் தேதி வரை வரை நீதிமன்ற காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து கடலுக்குச் சென்ற மகேந்திரன், ராமர்பாண்டி என்பவர்களுக்குச் சொந்தமான இரண்டு விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் ரோந்துப் பணியின் போது, கடந்த அக்டோபர் 22-ல் நெடுந்தீவு அருகே சிறைபிடித்தனர்.

அத்துடன் அந்தப் படகுகளில் இருந்த மோகன், மகேந்திரன், ராம்குமார், மாரிகணேஷ், கண்ணன், அன்பரசன், முனீஸ் பிரபு, குருசெல்வம், பாண்டி, முத்துக்கருப்பையா, ராமபாண்டியன் , தங்கராஜ், ராஜு, ஆண்டனி பிச்சை, பூமிநாதன், சுந்தரபாண்டி ஆகிய 16 மீனவர்களை கைது செய்த இலங்கைக் கடற்படை, அவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த 16 மீனவர்களின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து 16 மீனவர்களும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஷ்கரன், 16 மீனவர்களுக்கும் நவம்பர் 20 வரையிலும் இரண்டாவது முறையாக நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து, மீனவர்கள் 16 பேரும் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து