முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களின் திருமண வயதை 9-ஆக குறைக்கும் சட்டத் திருத்தம் : ஈராக்கில் விரைவில் அமல்படுத்த முடிவு

செவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2024      உலகம்
Iraq 2024-11-12

Source: provided

பாக்தாத் : பெண்களின் திருமண வயதை ஒன்பதாக குறைக்கும் சட்டத்திருத்தம் ஈராக்கில் விரைவில்  கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

ஈராக்கில் பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைக்கும் சர்ச்சைக்குரிய சட்ட மசோதா அந்நாட்டின் பாராளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஆண் குழந்தைகளுக்கு 15 வயதிலும் , பெண் குழந்தைகள் 9 வயதை எட்டியதும் திருமணம் செய்து வைக்க முடியும்.

பெண்களின் சுதந்திரத்தை மதத்தின் பெயரில் முற்றிலுமாக படுகொலை செய்யும் இந்த மசோதாவுக்கு சர்வதேச அளவில் கண்டங்கள் எழுந்தன. இந்நிலையில் இந்த மசோதாவின்படி திருமண வயதை ஒன்பதாக குறைக்கும் சட்டத்திருத்தம்  விரைவில்  கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

ஷியா முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் கட்சிகள் சார்பில் ஈராக் பாராளுமன்றத்தில் இந்த சட்டத்திருத்தத்தைக் கொண்டுவர அதிக அழுத்தம் தரப்பட்டு வருகிறது.  கால மாற்றத்தில் சமீப காலமாக மதம் மற்றும் அதன் தத்துவங்கள் வாயிலான  மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது சிரமமாகி வரும் காரணத்தால் மீண்டும் அதை வலுப்படுத்தும் நோக்கத்துடன் ஷியா பிரிவு முஸ்லீம் ஆதிக்க கட்சிகள்  இந்த சட்டத்திருத்தத்தைக் கொண்டு வருவதில் தீவிரம் காட்சி வருகிறது.  

தற்போது வரை ஈராக்கில் பெண்களின் திருமணத்துக்கான சட்டப்பூர்வ வயது 18 ஆக உள்ளது. 1959-ல் கொண்டுவரப்பட்ட சட்டப் பிரிவு 188 மதம் கடந்து  இந்த உரிமையை  அந்நாட்டு மக்களுக்கு வழங்கியது. ஆனால் இந்த பிரிவு  திருத்தப்பட்டு சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுமானால் பெற்றோர் மற்றும் நீதித்துறை சம்மதத்தில், 9 வயதில் பெண்களை திருமணம் செய்து கொடுக்கலாம்.

சட்டப்பூர்வ வயது 18 ஆக இருந்தாலும் ஏற்கனவே ஈராக்கில் 28 சதீவீத பெண்களுக்கு அந்த வயதை எட்டும் முன்பே திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது என்று ஐ.நா.வின் குழந்தைகள் அமைப்பான யுனிசெப்  தெரிவித்துள்ள்ளது. 

இந்நிலையில் தற்போதய இந்த வயது தளர்வு, ஈராக்கில் அதிகப்படியான குழந்தைத் திருமணத்தை ஊக்குவிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் பெண்கள் இளம் வயதில் கர்ப்பம் தரித்தல், கல்வி இடைநிற்றல் அபாயம் ஏற்படும். எனவே இதனை  சுட்டிக்காட்டி  மனித உரிமை குழுவினர் பெண்கள் அமைப்பினர், ஆகியோர் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  மேலும் இந்த மசோதாவுக்கு எதிராக ஈராக் பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து