முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதானி விவகாரம் தொடர்பாக விவாதிக்ககோரி முதல் நாளை பார்லி.யில் எதிர்க்கட்சியினர் அமளி இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

திங்கட்கிழமை, 25 நவம்பர் 2024      இந்தியா
Parlie 2024-11-25

Source: provided

 

புதுடில்லி: பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் பலத்த எதிர்பார்ப்புடன் நேற்று (நவ.,25) துவங்கியது. அதானி விவகாரம் மற்றும் மணிப்பூர் குறித்து விவாதிக்க கோரி, எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். மக்களவை மற்றும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்ட.

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (நவ.,25) துவங்கியது. டிசம்பர் 20-ம் தேதி வரை கூட்டதொடர் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில், வக்பு வாரிய திருத்த மசோதா, ஒரே நாடு; ஒரே தேர்தல் உள்ளிட்ட 16 மசோதாக்களை நிறைவேற்ற, ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது. வக்பு வாரிய திருத்த மசோதா, பார்லி., கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது

சூரிய சக்தி மின்சாரத்தை விற்க இந்திய அதிகாரிகளுக்கு, லஞ்சம் கொடுக்கப்பட்டதாக பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி மீது அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று (நவ.,25) லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு அவைகளும் துவங்கியதும், இந்த விவகாரத்தை விவாதிக்க கோரி, காங்கிரஸ், - திரிணமுல் காங்., - தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய 'ன்டியா' கூட்டணியினர் கோஷம் எழுப்பினர். அவை துவங்கியதும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு தமிழக எம்.பி.,க்கள் கோஷம் எழுப்பினர். எதிர்க்கட்சியினர் அமளி காரணமாக, மக்களவை மற்றும் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து