முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி.யில் தொடர் அமளி: ஜாக்கி வாசுதேவ் கோரிக்கை

வெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2024      இந்தியா
Parlimanet 2024-06-30

புதுடெல்லி, பாராளுமன்றத்தில் தொடர் அமளி நிலவி வரும் நிலையில் சமூக வலைதளத்தில் சத்குரு ஜாக்கி வாசுதேவ் கருத்து தெரிவித்துள்ளார். அதில் செல்வத்தை உருவாக்குபவர்கள் மீது சர்ச்சை கூடாது என்று தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் இருந்து அதானி விவகாரம் தொடர்பாக விவாதிக்க அவை நடவடிக்கையை ஒத்திவைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அவை நடவடிக்கைகள் முழுமையாக நடைபெறவில்லை. அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சோரோஸ்- சோனியா காந்தி விவகாரத்தை பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக விவாதம் நடத்த பா.ஜ.க. கோரிக்கை வைக்கிறது. இதனால் மக்களவை மற்றும் மாநிலங்களவை செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள மதகுரு ஜாக்கி வாசுதேவ், உலகிற்கு ஜனநாயகத்தின் கலங்கரை விளக்கமாக இருக்க நாம் விரும்பும் போது, இந்திய பாராளுமன்றத்தில் இடையூறுகள் ஏற்படுவதைக் காண்பது வருத்தமளிக்கிறது. இந்தியாவின் செல்வத்தை உருவாக்குபவர்கள், வேலை வாய்ப்பை வழங்குபவர்களை அரசியல் சர்ச்சைகளுக்கு ஆளாகக்கூடாது. முரண்பாடுகள் இருந்தால், அதை சட்டத்தின் கட்டமைப்புக்கு உட்பட்டு உரிய முறையில் அதற்கு தீர்வு காண வேண்டும் ஆனால் அவர்களை அரசியல் கால்பந்தாக பந்தாடக்கூடாது. மிக முக்கியமாக, இந்திய வணிகங்கள் செழிக்க வேண்டும்.பாரதம் பவ்ய பாரதமாக மாறுவதற்கான ஒரே வழி இதுதான்என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து