முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்: மாயாவதி கோரிக்கை

திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2024      இந்தியா
Mayavathi 2024-12-16

Source: provided

புதுடெல்லி: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா பாராளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட இன்டியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறியதாவது., பாஜகவும் இடஒதுக்கீடுக்கு எதிரான மனநிலையைக் கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. அதனால்தான் நிலுவையில் உள்ள அந்த மசோதாவை நிறைவேற்ற பாஜக தலைமையிலான மத்திய அரசு முன்வரவில்லை. ஏழைகள் மற்றும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு ஆதரவான கட்சி என்ற அடிப்படையில், பாஜக அரசு கொண்டுவர உள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளிக்கும். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் அரசின் செலவுகள் குறையும். இதனால் மக்கள் நலத்திட்டங்களை தடையின்றி செயல்படுத்த முடியும். எனவே, அரசியல் கருத்து வேறுபாடுகளை மறந்து, நாட்டின் நலன் கருதி அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து