முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'பாலஸ்தீன்' என பெயர் பொறிக்கப்பட்ட கைப்பையுடன் பார்லி. வந்த பிரியங்கா காந்தி

திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2024      இந்தியா
Priyanka 2023 04 11

Source: provided

புதுடெல்லி : காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகவும் சமீக காலங்களாக பிரியங்கா காந்தி குரல் எழுப்பி வரும் நிலையில் நேற்று 'பாலஸ்தீன்' என பெயர் பொறிக்கப்பட்ட கைப்பையுடன் பிரியங்கா காந்தி வந்தது தற்போது கவனம் பெற்றுள்ளது.

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது.

அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், 101 இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியிருந்தது. அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று பங்கேற்க வந்த வயநாடு தொகுதி எம்.பி. பிரியங்கா காந்தி பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிக்கு வகையில், 'பாலஸ்தீனம்' என்று பெயர் பொறிக்கப்பட்ட கைப்பை ஒன்றை பாராளுமன்றத்திற்கு எடுத்து வந்தார். அதுமட்டுமின்றி, அந்த பையில் தர்பூசணி உள்பட பாலஸ்தீனிய சின்னங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. பாலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பிரியங்கா காந்தி நேற்று எடுத்துவந்த கைப்பை அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து