முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷுக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவிப்பு

செவ்வாய்க்கிழமை, 17 டிசம்பர் 2024      தமிழகம்
CM 2024-12-16

Source: provided

சென்னை : உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷ்-க்கு நேற்று தமிழக அரசு சார்பில் நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ரூ.5 கோடி பரிசுத்தொகையை வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

18 வயதில் சாம்பியன்...

சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன் போட்டி நடந்து முடிந்துள்ளது. இதில் தமிழக வீரர் குகேஷ், சீன போட்டியாளரான டிங் லிரெங்கைகை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றார். இதன்மூலம் 18 வயதில் உலக சாம்பியன் பெற்ற இளம் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் சாம்பியன் கார்ல்சன் தொடங்கி உலக பணக்காரரான எலான் மஸ்க் வரை உலகம் முழுவதிலும் இருந்து குகேஷூக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

உற்சாக வரவேற்பு... 

இதையடுத்து, நேற்று முன்தினம் சென்னை திரும்பிய உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் அவரை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்ல வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர், குகேஷ் ஆகியோர் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. 

ரூ.5 கோடி பரிசு...

இதனிடையே, உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷூக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நேற்று பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், தமிழக கிராண்ட் மாஸ்டர்கள் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகையை வழங்கி கவுரவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து