முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தி.மு.க. எதிர்ப்பு: பார்லி., கூட்டுக்குழுவுக்கு அனுப்ப எம்.பி. டி.ஆர்.பாலு வலியுறுத்தல் : ஒரே நேரத்தில் தேர்தல் என்பது சாத்தியமற்றது

செவ்வாய்க்கிழமை, 17 டிசம்பர் 2024      இந்தியா
TR-Balu-2024-12-02

Source: provided

புதிடெல்லி : பாராளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு திமுக எம்பி டி.ஆர்.பாலு எதிர்ப்பு தெரிவித்தார். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது என்று பேசினார்.

‘ஒரே நாடு; ஒரே தோ்தல்’ நடைமுறைக்கான இரு மசோதாக்களையும் மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் நேற்று தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், சமாஜவாதி, திரிணமூல், திமுக உள்ளிட்ட கட்சிகளின் மக்களவை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.

திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசியதாவது: “அரசியல் சாசன திருத்தம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதுபோல், ஜனநாயகத்தை அழிப்பது போன்று உள்ளது. அரசுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாதபோது எப்படி மசோதாவை நிறைவேற்றுவீர்கள்.

வாக்காளர்கள் வாக்களித்து 5 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய முடியும். இந்த உரிமையை பறிக்க முடியாது. அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்து ஒற்றுமை என்பது கடினமாக இருக்கும் என்பதால் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது என்று 2015-ல் தாக்கல் செய்யப்பட்ட 9-வது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை கூட்டுக்குழுவின் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசீலனை செய்ய வேண்டும். அதன்பிறகு விவாதத்துக்கு அவைக்கு கொண்டு வரவேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து