முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட்சேவை இன்று தொடக்கம்

செவ்வாய்க்கிழமை, 17 டிசம்பர் 2024      ஆன்மிகம்
Tirupati 2023 03 30

Source: provided

திருப்பதி : அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் திருப்பதி செல்ல விரும்பும் பக்தர்கள் வருகிற 24-ம் தேதி சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். விசேஷ நாட்களில் பக்தர்களின் வருகை இன்னும் அதிகமாக இருக்கும். ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம், முன்பதிவு முறையை கொண்டு வந்துள்ளது.

90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து ஏழுமலையானை தரிசனம் செய்யும் வகையில், ஒவ்வொரு மாதத்துத்துக்குமான தரிசன டிக்கெட்டுகள், ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்படுகின்றன. அதாவது 90 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்தால் மட்டுமே ஏழுமலையானை கட்டண தரிசனத்திலோ சேவையிலோ தரிசிக்கலாம். இல்லாவிட்டால் நடைபாதை தரிசனம் அல்லது இலவச தரிசனத்தில்தான் செல்ல முடியும்.

அவ்வகையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது. இதில் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஸ்டதளம் போன்ற ஆர்ஜித சேவைகள் அடங்கும்.

பக்தர்கள் இன்று முதல் 20-ம் தேதி வரை இந்த சேவைகளுக்கான டிக்கெட் பெற பதிவு செய்ய வேண்டும். டிக்கெட் ஒதுக்கீடு பெற்றவர்கள் 20-ம் தேதி முதல் டிசம்பர் 22-ம் தேதி மதியம் 12 மணிக்குள் டிக்கெட்டுக்கான கட்டணத்தை செலுத்தவேண்டும்.

கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்வம், சஹஸ்ர தீபாலங்கார சேவை போன்ற ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் டிசம்பர் 21-ம் தேதி காலை 10 மணிக்கும், மெய்நிகர் சேவைகள் மற்றும் அவர்களுக்கான தரிசன ஒதுக்கீடுகள் அதே நாளில் பிற்பகல் 3 மணிக்கும் வெளியிடப்படும்.

23-ம் தேதி காலை 10 மணிக்கு அங்க பிரதட்சண டோக்கன்களும், 11 மணிக்கு ஸ்ரீவாணி டிக்கெட்டுகளும், மாலை 3 மணிக்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான டோக்கன்களும் வெளியிடப்படும்.

ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 24-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகிறது. திருமலை மற்றும் திருப்பதியில் தேவஸ்தான விடுதிகளில் தங்குவதற்கான முன்பதிவு அதே நாளில் மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

ஆர்ஜித சேவைகள், தரிசனம் மற்றும் தங்குமிட டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளம் வாயிலாக மட்டுமே (https://ttdevasthanams.ap.gov.in) முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து