முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவர்கள் : டெல்லி போலீஸ் விசாரணையில் அம்பலம்

ஞாயிற்றுக்கிழமை, 22 டிசம்பர் 2024      இந்தியா
School 2024-05-14

Source: provided

புதுடெல்லி : தலைநகர் டெல்லியில் தேர்வுக்கு பயந்து பள்ளிகளுக்கு மாணவர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 13 மற்றும் 17 தேதிகளில் டெல்லியில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. 13-ந்தேதி மட்டுமே 30 பள்ளிகளுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில்கள் வந்தன. டெல்லி ரோகினி பகுதியில் கடந்த வாரம் இ-மெயிலில் 2 பள்ளிகளுக்கு வெடுகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சிறப்பு படை போலீசார் இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணயில் அந்தந்த பள்ளிகளில் படிக்கும் 2 மாணவர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இரு மாணவர்களும் பள்ளித் தேர்வுக்கு படிக்காததால் தேர்வை ஒத்திவைப்பதற்காக இவ்வாறு செய்ததாக கூறினர். சிறுவர்கள் என்பதால் அறிவுரை வழங்கி அனுப்பியதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

கடந்த 14-ம் தேதி இதே போன்று ஒரு தனியார் பள்ளி மாணவன் பள்ளிக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் அவரது வீட்டிற்குச் சென்று போலீசார் எச்சரித்தனர். மேலும், அந்த மாணவனின் பெற்றோரிடம் அவரது நடவடிக்கை குறித்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தி இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து