முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தேள் ராணி

50 ஆயிரம் தேள்களுடன் 33 நாட்கள் இருந்து  கின்னஸ் சாதனை படைத்துள்ளார் தாய்லாந்தை சேர்ந்த பெண்மணி ஒருவர். இதனால் இவர் "தேள் ராணி" என அழைக்கப்படுகிறார். தாய்லாந்தை சேர்ந்தகாஞ்சனா கேட்சாவ் என்பவர் கின்னஸ் போட்டியில் கலந்துகொண்டார். இவர் இதற்கு முன்னர் 3 நிமிடங்கள், 28 நொடிகள் டஜன் கணக்கில் கொடிய விஷம் கொண்ட தேள்களை தனது முகம், கழுத்து மற்றும் கைகளில் உலாவ விட்டு கின்னஸ் சாதனை படைத்தார். தற்போது இரண்டாவது முறையாக 50,000 தேள்களுடன் 12 மீட்டர் சதுர கண்ணாடி உறைக்குள் 33 நாட்கள் இருந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தேள்களின் கண்பார்வை மிகவும் மங்கலானது, அது வாசனையை வைத்தே தனது உணவினை தேடிக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலாவில்...

2016-ம் ஆண்டுக்கான உலகளவில் அதிக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தாண்டு ஐரோப்பிய நாடான ஸ்பெயின் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த பிரான்ஸ் இந்தாண்டு 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியா இந்த பட்டியலில் 40 வது இடத்தில் உள்ளது.

‘ப்ளாக் போர்டு’

பிளாக் போர்டு என்பது அமெரிக்க நாட்டை சார்ந்த ஓர் கல்வி மென்பொருள் நிறுவனம். இது முக்கியமாக பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமலே வீட்டில் இருந்தபடி கல்வி கற்றுக் கொள்ளமுடியும். இது 90க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வருகிறது.  கல்வி கற்றலையும், கற்பித்தலையும் எளிமையாக்கும் ‘ப்ளாக் போர்டு’ என்ற மென்பொருள் தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் எளிதில் கற்கவும், ஆசிரியர்களுக்கு கற்பித்தலிலும் மிகவும் உதவியாக இருக்குமாம்.

வாட்ஸ் அப்பிலும்...

முன்பு ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு 7.1 நொவ்கட் மாடலில் மட்டும் செயல்படக்கூடிய யுனிகோடு 9 எனும் மென்பொருளானது தற்போது ஆண்ட்ராய்டின் அனைத்து வெர்ஷனிலும் அப்டேட் ஆகியுள்ளது. அதனால் பீட்டா எமொஜிகளான பட்டாம்பூச்சி, தரையில் சிரித்து உருளும் முகம், கோமாளி முகம், வானவில்  என பல புதிய எமொஜிகள் வாட்ஸ் அப்பில் இணைக்கப்பட்டுள்ளன.

புதுமையான உணவு

பின்லாந்தில் உள்ள வி.டி.டி. தொழில் நுட்ப ஆராய்ச்சி மையம், லபீர்னந்தா தொழில் நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள், காற்றில் இருந்து கார்பன்டை ஆக்சைடை பிரித்து எடுத்து அதிலிருந்து புரோடீன் பவுடர் தயாரித்துள்ளனர். இதை மனிதர்கள்,  விலங்குகள் உணவு பொருளாக பயன்படுத்த முடியுமாம். இந்த புரோடீன் பவுடரை மின்சாரத்துடன் சேர்த்து எங்கு பயன்படுத்தினாலும் அது உணவுப் பொருளாக கார்பன்டை ஆக்சைடு மற்றும் மின்சாரத்துடன் சேர்ந்து தயாரிக்கப்படும் புரோடீன் பவுடர் 10 மடங்கு அதிக ஒளிச்சேர்க்கையை ஏற்படுத்தி காய்கள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட உணவு பயிர்களின் மகசூலை அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

உலகின் மிகச்சிறிய நாடு எது தெரியுமா?

உலகின் மிகச்சிறிய நாடு ‘வாடிகன் சிட்டி’. இது மொத்தமாக 0.44 சதுர கிலோமீட்டர் அளவே உடையது. மொத்தமாக 110 ஏக்கர் மட்டுமே, இதன் பரப்பளவு. இது ரோம் நகரின் உள்ளேயே அமைந்துள்ளது. இது உலகளாவிய கத்தோலிக சபையின் தலைமை இடமாக உள்ளது. உலகின் மிகப்பெரிய தேவாலயமான புனித பீட்டர் பஸிலிக்கா இங்கு உள்ளது. இது 1929ம் ஆண்டு, முசோலினி போப்புடன் செய்துக் கொண்ட லாட்டரன் உடன்படிக்கையின் போது உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது, இது நடுநிலை நாடாக இருந்தபடியால், மேலும் கத்தோலிக சபையின் தலைநகராக இருந்தபடியால், தாக்குதலுக்கு உள்ளாகவில்லை. உலகெங்கிலும் உள்ள 100 கோடி கத்தோலிகர்களின் தன்னார்வ கொடையே இதன் வருமானம். இதைத் தவிர, அருங்காட்சியக நுழைவுக் கட்டணம், தபால் தலைகள், சுற்றுலா நினைவுப் பொருட்கள் வழியாக பணம் கிடைக்கிறது. இதன் மொத்த மக்கள் தொகை, கிட்டத்தட்ட 1000 மட்டுமே. இது பிறப்பினால் வரும் குடியுரிமை அல்ல. இது கத்தோலிக சபையின் பல்வேறு பொறுப்புகளில் அமர்த்தப்படும் நபர்களுக்கு, மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு, அந்த பொறுப்பின் காலத்திற்கேற்ப, குடியுரிமை வழங்கப்படும். அந்தப் பொறுப்பின் காலத்திற்கு பிறகு, தன்னிச்சையாகவே, லாட்டரன் உடன்படிக்கையின் படி, அந்தக் குடியுரிமை இத்தாலிய குடியுரிமையாக மாற்றப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 days ago