முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்ப் - பைடன் இன்று நேருக்கு நேர் விவாதம்

புதன்கிழமை, 26 ஜூன் 2024      உலகம்
Joe-Biden-Trump 2024-06-26

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி இன்று நடக்கிறது. இதில் ஜோபைடன், டிரம்ப் இருவரும் நேருக்கு நேர் சந்தித்து விவாதிக்கவுள்ளனர். 

அமெரிக்காவில் வரும் நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். 

இந்த தேர்தலின் முக்கிய அம்சமாக, வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களில் நேருக்கு நேர் விவாதிப்பது வழக்கம். அந்த வகையில் முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது. 

ஜார்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்வில் ஜோ பைடனும், டொனால்டு டிரம்பும் நேருக்கு நேர் சந்தித்து விவாதிக்கின்றனர். அப்போது, தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பட்டியலிட்டு வாக்காளர்களிடம் ஆதரவு கேட்பார்கள். 

தங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? என்பது குறித்தும் விளக்கம் அளிப்பார்கள். குறிப்பாக, குடியேற்றம், பொருளாதாரம் மற்றும் பணவீக்கம் தொடர்பான விவகாரங்கள், ரஷ்யா உக்ரைன் போர் மற்றும் காசாவில் இஸ்ரேலின் போர் பற்றிய கேள்விகள், சீன விவகாரம் போன்றவை விவாதத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தம் 90 நிமிடம் விவாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவாதத்தில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட கடுமையான விதிமுறைகள் உள்ளன. பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. 

டிரம்ப்-பைடன் இருவரும் அதிபர் வேட்பாளர்களாக நேருக்கு நேர் விவாதம் செய்வது இது மூன்றாவது முறை ஆகும். இதற்கு முன்பு, 2020 தேர்தலில் ஒருவரையொருவர் எதிர்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவாதத்தில் இரு வேட்பாளர்களும் அதிக உணர்ச்சிவசப்பட வாய்ப்பு உள்ளதாக விவாத நிகழ்ச்சியின் இயக்குனர் ஆரோன் கால் கூறியுள்ளார். அவர்கள் இருவரும் கடைசியாக நேருக்கு நேர் சந்தித்ததில் இருந்து விவாதம் செய்யவில்லை  என்றும், தற்போதைய விவாதத்தில் அவர்களின் வழக்கமான விவாத பாணிகளுக்கு திரும்ப சிறிது நேரமாகலாம் என்றும் இயக்குனர் ஆரோன் கால் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 day 18 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 day 18 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து