முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரியாவின் குப்பை பலூன்களால் தென் கொரியாவின் விமான நிலையம் முடங்கும் சூழல்

புதன்கிழமை, 26 ஜூன் 2024      உலகம்
South-Korea 2024-06-26

Source: provided

சியோல் : வடகொரியா அனுப்பி வரும் குப்பைகள் நிரம்பிய பலூன்களால் தென்கொரியாவின் இன்சியான் சர்வதேச விமான நிலையம் முடங்கும் சூழல் உருவாகி உள்ளது. 

தொடர்ச்சியாக குப்பைகள் அடங்கிய பலூன்கள் விமான நிலையத்திற்குள் நுழைந்ததை அடுத்து, விமானங்கள் தரையிறங்குவதிலும், புறப்பட்டு செல்வதிலும் கால தாமதம் ஏற்பட்டது. 

இதன் காரணமாக ஓடுபாதைகள் ஒவ்வொன்றாக முடக்கப்பட்டு வருகிறது. விமான நிலையம் மட்டுமின்றி அதன் எல்லைப் பகுதிகளிலும் வட கொரியாவின் குப்பைகள் அடங்கிய பலூன்கள் ஏராளமாக குவிகின்றன. குப்பைகள் நிரம்பிய பலூன்களால் அந்த பகுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. 

கடந்த மே மாதம் துவங்கி வட கொரியா தென் கொரியாவிற்குள் குப்பைகள் அடங்கிய பலூன்களை அனுப்பி வருகிறது. முன்னதாக வட கொரியாவின் பல்வேறு செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தென் கொரியா சார்பில் பலூன்கள் அனுப்பப்பட்டன. 

இவைகளில் வட கொரியாவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய காகிதங்கள் இடம்பெற்று இருந்தன. இதோடு எல்லைப் பகுதியில் வட கொரியாவுக்கு எதிரான இசையை தென் கொரியா ராட்சத ஒலிப்பெருக்கிகள் மூலம் இசைத்தது. 

தென்கொரியாவின் பலூன் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே வட கொரியா பலூன்களில் குப்பைகளை அனுப்ப துவங்கியது. அதன்படி தற்போது வட கொரியா அனுப்பிய பலூன்களால் தென்  கொரிய விமான நிலைய செயல்பாடுகள் முடங்கியுள்ளன.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 day 18 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 day 18 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து