முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய ராணுவ தளபதிக்கு சர்வதேச கோர்ட்டு பிடிவாரண்ட்

புதன்கிழமை, 26 ஜூன் 2024      உலகம்
Russia 2024-06-26

Source: provided

மாஸ்கோ : உக்ரைன் குடியிருப்பு பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கில் முன்னாள் ராணுவ அமைச்சர் செர்ஜி சோய்கு மற்றும் ராணுவ தளபதி வலேரி ஜெராசிமோவ் ஆகியோருக்கு சர்வதேச கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. 

உக்ரைன் மீது ரஷ்யா 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. 2 ஆண்டுகளை தாண்டியும் இந்த போர் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த போரில் ரஷ்யா கடந்த 2022 அக்டோபர் மாதம் உக்ரைனின் குடியிருப்பு பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். 

ரஷ்யாவின் இந்த செயல் மனிதத் தன்மையற்றது என பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன.இதனையடுத்து ரஷ்யா மீது நெதர்லாந்தில் உள்ள சர்வதேச கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் ராணுவ அமைச்சர் செர்ஜி சோய்கு மற்றும் ராணுவ தளபதி வலேரி ஜெராசிமோவ் ஆகியோருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 

இதுதொடர்பான வழக்கில் ஏற்கனவே ரஷ்ய அதிபர் புடின் மீதும் சர்வதேச கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 day 18 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 day 18 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து