முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தொடர் அமளி: கூட்டத்தொடர் முழுவதும் அ.தி.மு.க.வினர் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு உத்தரவு

புதன்கிழமை, 26 ஜூன் 2024      தமிழகம்
Appavu--1

சென்னை, சட்டப்பேரவை தொடங்கியதுமே இன்றும் (ஜூன் 26) அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும், அவை நடவடிக்கைக்கு தொடர்ந்து குந்தகம் விளைவித்ததாக கூறி நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அ.தி.மு.க. உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

சட்டப்பேரவைக்கு தொடர்ந்து கறுப்புச் சட்டையில் வந்த அ.தி.மு.க.வினர், நேற்றும் கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்க கோரி அமளியில் ஈடுபட்டனர். கேள்வி நேரத்துக்கு பின் பேச அனுமதி தருகிறேன் என சபாநாயகர் அப்பாவு கூறிய பின்பும் தொடர்ந்து அ.தி.மு.க.வினர் இருக்கையில் அமராமல் அமளியில் ஈடுபட்டதால் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அ.தி.மு.க. உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். பேரவை விதிகளின்படி சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.

முன்னதாக, அவை முன்னவர் துரைமுருகன் அ.தி.மு.க. உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை பேரவையில் முன்மொழிந்தார். அப்போது பேசிய துரைமுருகன், “பிரச்சினையை சட்டப்பேர்வையில் பேச எல்லோருக்கும் உரிமை உண்டு. நாங்களும் பேசி உள்ளோம். கறுப்புச் சட்டை அணிந்து வந்து ஊடகத்திடம் பேசிவிட்டு வீட்டுக்குப் போய்விடுகிறார்கள். விளம்பரத்துக்காகவே அ.தி.மு.க.வினர் தொடர்ந்து விதிகளுக்கு முரணாக செயல்படுகின்றனர்” என்றார். இதனைத் தொடர்ந்து நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அ.தி.மு.க. உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 day 18 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 day 18 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து