முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு

புதன்கிழமை, 26 ஜூன் 2024      விளையாட்டு
Harmanpreet-Kaur 2023-07-23

Source: provided

பிரான்ஸ் தலைநகரான பாரிசில் ஜூலை 26 -ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய ஆண்கள் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்பிரீத் சிங் கேப்டனாகவும், ஹர்திக் சிங் துணை கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 5 வீரர்கள் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்திய அணி ஜூலை 27-ம் தேதி தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. ஜப்பானின் டோக்கியோவில் கடந்த முறை நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் அணி வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

_______________________________________________________________________

ரஷித்கான் மேலும் ஒரு சாதனை

கிங்ஸ்டவுனில் நடந்த டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது. இந்தப் போட்டியில் ரஷித் கான் 4 ஓவரில் 23 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். இன்று நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. 

இந்நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிவிரைவாக 150 விக்கெட்டுகளை எடுத்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் படைத்துள்ளார்.ரஷித் கான் இதுவரை 92 போட்டிகளில் விளையாடி 154 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 150 விக்கெட் வீழ்த்திய பட்டியலில் நியூசிலாந்தின் டிம் சவுதி 164 விக்கெட்டுடன் முதலிடத்தில் உள்ளார். வங்காளதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் 149 விக்கெட்டுகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறார்.

_______________________________________________________________________

வார்னர் குறித்து யுவ்ராஜ் சிங் 

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நேற்று (ஜூன் 25) ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 37 வயதான வார்னர் டி20 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடந்த 2009-இல் அறிமுகமான வார்னர், டி20யில் 110 ஆட்டங்களில் 3,277 ரன்களையும், 112 டெஸ்ட் ஆட்டங்களில் 8,786 ரன்களையும், 161 ஒருநாள் ஆட்டங்களில் 6932 ரன்களையும் விளாசியுள்ளார். இந்நிலையில் வார்னர் ஓய்வு குறித்து முன்னாள் இந்திய வீரர் சிக்ஸர் மன்னன் யுவ்ராஜ் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். 

அதில் அவர் தெரிவித்தாவது., யாருமே அமைதியான ஓய்வை விரும்பமாட்டார்கள். ஆனால் அதுதான் வாழ்க்கையின் விளையாட்டாக இருக்கிறது. உங்களது அபாரமான கிரிக்கெட் வாழ்க்கையில் சிறப்பாக செயல்பட்டுள்ளீர்கள். பந்தினை பவுன்டரிக்கு அதிரடியாக அடிப்பதிலிருந்து பாலிவுட் நடனங்கள், வசனங்கள் வரை எல்லாமே வார்னரின் பாணியில் சிறப்பாக செய்துள்ளீர்கள். பயங்கரமான தொடக்க வீரர், உற்சாகமான அணி வீரர், ஆடுகளத்துக்கு உள்ளேயும் வெளியேயும் உண்மையான மகிழ்விப்பவர். உங்களுடன் விளையாடியதும் ஓய்வு அறையில் பழகியதும் எனக்கு மகிழ்ச்சியானது. அழகான குடும்பத்துடன் காலம் கழிய வாழ்த்துகள் லெஜண்ட் என்றார்.

_______________________________________________________________________

இன்சமாம் திடீர் குற்றச்சாட்டு 

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் கடந்த திங்கட்கிழமை அன்று ஆஸ்திரேலிய அணியை 24 ரன்களில் வென்றது இந்தியா. இந்நிலையில், இந்தப் போட்டியில் இந்தியா பந்தை சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இந்திய அணியின் இடது கை பவுலரான அர்ஷ்தீப் சிங், தனது இரண்டாவது ஸ்பெல்லில் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்ய காரணமே பந்தை சேதப்படுத்தியதால் தான் என இன்சமாம் தெரிவித்துள்ளார். இது சர்ச்சையை எழுப்பியுள்ளது.

“இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் 16-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். அப்போது அவர் வீசிய பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆனது. டி20 ஆட்டம் என்பதால் எப்படியும் பந்து புதிதாகவே இருந்திருக்கும். அப்படி இருக்கும் சூழலில் எப்படி இது நடந்தது. இடைப்பட்ட ஓவர்களில் பந்து அதற்கு ஏற்ற வகையில் ரெடி செய்யப்பட்டதா. நடுவர்கள் கொஞ்சம் தங்களது கண்களை திறந்து பார்க்க வேண்டும்” என இன்சமாம் கூறியுள்ளார். இது பாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் தெரிவித்த நிலையில் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 day 18 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 day 18 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து