முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் 4 புதிய மாநகராட்சிகள் உதயம் : சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்

சனிக்கிழமை, 29 ஜூன் 2024      தமிழகம்
TN 2024-06-29

Source: provided

சென்னை : தமிழகத்தில் மேலும் 4  புதிய மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான சட்ட மசோதா நேற்று முன்தின் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று மசோதா நிறைவேறியது. இதன்படி திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்ந்துள்ளது.

இது தொடர்பான வருவாய், மக்கள் தொகை வரம்புகள் திருத்த மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநகராட்சியாக தரம் உயர்த்த தடையாக இருந்த மக்கள் தொகை, ஆண்டு வருமானத்தை தளர்த்தி திருத்தப்பட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி சட்டப்பிரிவில் மக்கள் தொகை 3 லட்சத்தில் இருந்து 2 லட்சமாகவும், ஆண்டு வருமானம் ரூ.30 கோடியில் இருந்து ரூ.20 கோடியாகவும் குறைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி உதயமாகியுள்ளது. திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையிலுள்ள பகுதிகளை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி உதயமாகிறது.

இதேபோல், நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சி, காரைக்குடி நகராட்சி மற்றும் இரண்டு பேரூராட்சிகள், ஐந்து ஊராட்சிகளை ஒன்றிணைத்து காரைக்குடி மாநகராட்சி என மொத்தம் 4 புதிய மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான சட்ட மசோதா நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டன.  இந்நிலையில் மாநகராட்சியை தரம் உயர்த்த தடையாக இருந்த மக்கள்தொகை, ஆண்டு வருமானத்தை தளர்த்தி திருத்தப்பட்ட மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 6 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 6 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து