முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் டிராவிட் வேண்டுகோள்

திங்கட்கிழமை, 1 ஜூலை 2024      விளையாட்டு
Dravid 2023 07 30

Source: provided

தலைமைப் பயிற்சியாளர் பதவிலிருந்து ராகுல் டிராவிட் ஓய்வு பெறுவதற்கு முன்பு விராட் கோலிக்கு, இதனையும் செய்துவிடுங்கள் என பணி ஒன்றை கொடுத்துள்ளார். டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது. டி20 உலகக் கோப்பைத் தொடரில் 2-வது முறையாக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த நிலையில், தலைமைப் பயிற்சியாளர் பதவிலிருந்து ராகுல் டிராவிட் ஓய்வு பெறுவதற்கு முன்பு விராட் கோலிக்கு, இதனையும் செய்துவிடுங்கள் என பணி ஒன்றை கொடுத்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக ஐசிசி அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள விடியோவில் ராகுல் டிராவிட் பேசியதாவது: ஐசிசி நடத்தும் மூன்று வெள்ளைப் பந்து தொடர்களிலும் சாம்பியன் பட்டம் வென்றுவிட்டீர்கள். இன்னும் சிவப்பு பந்து தொடரில் (ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்) ஒரே ஒரு கோப்பை மட்டும் மீதமிருக்கிறது. அதனையும் வென்றுவிடுங்கள் எனத் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.  ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இருமுறை முன்னேறிய இந்திய அணி, முதல் முறை நியூசிலாந்திடமும், இரண்டாவது முறை ஆஸ்திரேலியாவிடமும் தோல்வியடைந்தது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு லார்ட்ஸில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

____________________________________________________________________________

தினேஷ் கார்த்திக் புதிய அவதாரம்

ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐபிஎல் 2024 தொடருக்கு பின் ஓய்வு அறிவித்த தினேஷ் கார்த்திக், இப்போது பேட்டிங் பயிற்சியாளராக புதிய ரோலில் பணிபுரியவுள்ளார். 

இதுதொடர்பாக ஆர்சிபி தனது வலைதளத்தில் “எங்கள் கீப்பரே (தினேஷ் கார்த்திக்) புதிய அவதாரத்தில் ஆர்சிபிக்கு மீண்டும் வருக. இனி ஆர்சிபி ஆண்கள் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும், வழிகாட்டியாகவும் டிகே இருப்பார்!” என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இன்னொரு பதிவில், “கிரிக்கெட்டில் நீங்கள் ஒரு மனிதனை வெளியேற்றலாம். ஆனால் ஒரு மனிதனிடமிருந்து கிரிக்கெட்டை வெளியேற்ற முடியாது” என்று கூறியுள்ளது. 

____________________________________________________________________________

கனவு அணியில் 6 இந்திய வீரர்கள்

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வு செய்து கனவு அணியை அறிவித்துள்ளது. இந்திய அணிக்காக கோப்பையை வென்ற ரோகித் சர்மா ஐ.சி.சி.-இன் கனவு அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் 6 இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

ஐ.சி.சி.-இன் கனவு அணி: ரோகித் (கேப்டன்), குர்பாஸ், நிக்கோலஸ் பூரன், சூர்யகுமார் யாதவ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ரஷீத் கான், பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் பரூக்கி. நோர்ஜே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 days 4 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 days 5 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து