முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு

சனிக்கிழமை, 29 ஜூன் 2024      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை கையில் எடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 4 நாட்கள் தொடர் அமளி மற்றும் தர்ணாவில் ஈடுபட்டதால் இந்த சட்டசபை கூட்டத் தொடர் பரபரப்பாகவே இருந்தது. தொடர் அமளி காரணமாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதித்து கடந்த 26-ந்தேதி அன்று சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதனால் 27-ந் தேதியில் இருந்து நேற்று வரையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை கூட்டத்தொட ரில் பங்கேற்கவில்லை. கடைசி நாளான நேற்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனையை விதிக்கும் வகையில் சட்ட திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.

வருவாய் துறை, தொழில் துறை, சுகாதாரத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை உள்ளிட்ட அனைத்து துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதங்களும் நடைபெற்று முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. மகளிர் உரிமைத் தொகையை ஏற்கனவே 1 கோடியே 15 லட்சம் பேர் பெற்றுவரும் நிலையில், மேலும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு அதனை வழங்குவது தொடர்பான அறிவிப்பும் வெளியானது. இப்படி பல்வேறு அறிவிப்புகள் மற்றும் பரபரப்புடன் நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. 9 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில் தமிழக சட்டப்பேரவையை சபாநாயகர் அப்பாவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 6 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 6 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து