முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்ப் உடனான விவாத நிகழ்ச்சியின் போது தூங்கி விட்டேன்: ஜோ பைடன்

புதன்கிழமை, 3 ஜூலை 2024      உலகம்
03 DAMU 01 PIC

வாஷிங்டன், டிரம்ப் உடனான டி.வி. விவாத நிகழ்ச்சியின்போது கிட்டத்தட்ட தூங்கி விட்டதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன. ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் களமிறங்கியுள்ளார். அதே போல், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களமிறங்கியுள்ளார். 

இதனிடையே, அமெரிக்க அதிபர் தேர்தலுக்குமுன் நடந்த வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாத  நிகழ்ச்சிகளின்போது அதிபராக தேர்தெடுக்கப்பட்டால் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து இரு வேட்பாளர்களும் விவாதிப்பார்கள். 

அந்த வகையில் சி.என்.என். செய்தி நிறுவனம் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் ஜோ பைடன், டிரம்ப் இடையேயான நேருக்கு நேர் விவாதம் கடந்த 28-ம் தேதி நடைபெற்றது. இந்த விவாதத்தில் டிரம்ப், பைடன் என இருவரும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.  

ஆனால், இந்த விவாதத்தின்போது டிரம்ப்பின் குற்றச்சாட்டுகளுக்கு பைடன் சரிவர பதில் அளிக்கவில்லை. மேலும், விவாதம் முழுவதும் டிரம்ப்பின் ஆதிக்கமே இருந்தது. விவாதத்திற்குப்பின் நடந்த வாக்கெடுப்பில் விவாதத்தில் டிரம்ப் வெற்றி பெற்றதாக முடிவுகள் வெளியாகின.

இதனால், பைடனுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சொந்த கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்களே  பைடனுக்கு பதிலாக வேறு யாரையாவது அதிபர் வேட்பாளராக நிறுத்தலாமா? என திட்டமிட்டு வருகின்றனர். 

இந்நிலையில், டிரம்ப் உடனான விவாத நிகழ்ச்சியின்போது கிட்டத்தட்ட தூங்கி விட்டதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், 

விவாத நிகழ்ச்சிக்கு சில நாட்களுக்கு முன்பாக நான் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டேன். அதில் மிகவும் சோர்வாக இருந்தேன். இந்த விவகாரத்தை நான் சரிவர கையாளவில்லை. எனது அதிகாரிகள் கூறியதையும் நான் கேட்கவில்லை. விவாத நிகழ்ச்சியின் போது மேடையிலேயே நான் கிட்டத்தட்ட தூங்கி விட்டேன். நான் விவாத நிகழ்ச்சியில் சரிவர செயல்படவில்லை. அதற்கு நான் மன்னிப்புக்கேட்டுக் கொள்கிறேன் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து