முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மம்தாவுக்கு எதிராக கவர்னர் தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று ஒத்திவைப்பு

புதன்கிழமை, 3 ஜூலை 2024      இந்தியா
Mamtha 2023 04 22

கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக அம்மாநில கவர்னர் ஆனந்த போஸ் தொடர்ந்த வழக்கு விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி, கவர்னர் ஆனந்த போஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையே கடந்த மாதம் 27-ம் தேதி அன்று மாநில செயலகத்தில் நடந்த நிர்வாக கூட்டத்தின் போது ராஜ்பவனுக்கு செல்ல அஞ்சுவதாக பெண்கள் என்னிடம் தெரிவித்திருக்கிறார்கள் என்று மம்தா பானர்ஜி கூறியிருந்தார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக மேற்கு வங்க கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் கடந்த மாதம் 28-ம் தேதி கொல்கத்தா ஐகோர்ட்டில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் சில டி.எம்.சி. தலைவர்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணா ராவ் அமர்வில் நேற்று விசாரணை வந்தது. அப்போது, கவர்னர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுவில் தேவையான மாற்றங்களை சேர்த்து, புதிய விண்ணப்பத்தை தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். 

ஆனால் கவர்னருக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுவதாக அம்மாநில அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கவர்னர் தரப்பில் வழக்கறிஞர் விண்ணப்பத்தில் தேவையான மாற்றங்களை செய்த பிறகு இன்று இந்த வழக்கு விசாரிக்கப்படும் என உத்தரவிட்டார்.

முன்னதாக, கடந்த மே 2-ம் தேதி அன்று ராஜ்பவனின் ஒப்பந்த பெண் ஊழியர் ஒருவர் கவர்னர் மீது பாலியில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து