முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்கூட்டியே துவங்கிய தென்மேற்கு பருவமழை : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2024      இந்தியா
India-Meteorological 2022

Source: provided

புதுடெல்லி : தென்மேற்குப் பருவமழை, வழக்கத்தை விடவும் ஆறு நாள்கள் முன்னதாக, நாடு முழுவதும் தொடங்கியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை, மெல்ல நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடங்கியிருந்த நிலையில், ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் மாநிலங்களிலும் நேற்று தொடங்கியது. நாடு முழுவதும் ஜூலை 2-ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கியிருப்பதாகவும், இது வழக்கமாக நாடு முழுவதும் ஜூலை 8ஆம் தேதிதான் தொடங்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

முன்னதாக, கேரளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மே 30ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. இது வழக்கத்தைவிடவும் 6 நாள் முன்னதாகத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.  தென்மேற்குப் பருவமழை வழக்கமாக அடுத்து மகாராஷ்டிரத்தில் வலுவடையும். ஆனால், குறைந்தது. அதுபோல, மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்க்கண்ட், பிகார், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பருவமழைத் தொடங்க தாமதமானது. இதனால்தான், வடக்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களில் பல நாள்களுக்கு வெப்ப அலை வீசியது.

இதற்கிடையே ஜூன் 11 முதல் ஜூன் 27 வரை நாடு முழுவதும் பரவலாக வழக்கத்தைவிடக் குறைவான மழைப்பொழிவே காணப்பட்டது. ஜூன் மாதத்தில் இயல்பு மழை அளவு 165 ஆக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு 147 மி.மீட்டர்தான் மழைப்பொழிவு இருந்தது. கடந்த 2001ஆம் ஆண்டிலிருந்து கணக்கெடுத்தால் இதுதான் மிகவும் குறைவான மழைப்பொழிவாகும். ஆனால், ஜூலையில் இயல்பை விட அதிக மழைப்பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த மழைப்பொழிவால் ஹிமாலய மாநிலங்கள் மற்றும் அதில் பாயும் ஆறுகளில் வெள்ளம்பெருக்கெடுக்கும் என்றும் கணித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 4 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 5 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து