முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரு மாநில பிரச்சினைக்கு தீர்வு காண ரேவந்த் ரெட்டிக்கு சந்திரபாபு அழைப்பு

புதன்கிழமை, 3 ஜூலை 2024      இந்தியா
chandrababu-naidu

Source: provided

அமராவதி : இரு மாநில பிரச்சினைக்கு தீர்வு காண தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார். அதில் வரும் 6-ம் தேதி ஐதராபாத்தில் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை செய்யவும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து 10 மாவட்டங்களை கொண்ட தனி மாநிலமாக தெலுங்கானா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பிரிக்கப்பட்டது. இரு மாநிலங்களுக்கும் ஐதராபாத் 10 ஆண்டுகளுக்கு பொது தலைநகரமாக இருக்கும் எனவும் அதன் பிறகு அந்த நகரம் தெலுங்கானாவின் தலைநகரமாக மட்டுமே விளங்கும் எனவும் மாநிலப் பிரிவினை மசோதாவில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி ஐதராபாத் நகரின் மீது முழு உரிமை தற்போது தெலுங்கானாவுக்கு வந்துள்ளது. இது போல் அரசு ஊழியர்கள் பங்கீடு, நதிநீர் பங்கீடு, மின்சாரம் பங்கீடு என இரு மாநிலங்களுக்கு இடையே பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன. இவை அனைத்தும் ஓரளவு தீர்க்கப்பட்ட நிலையில், கிருஷ்ணா நதி நீர் பிரச்சினை மட்டும் இன்னமும் முழுவதுமாக தீர்க்கப்படாமல் உள்ளது.

இதே போன்று, கம்மம் மாவட்டத்தில் 7 மண்டலங்கள் தெலுங்கானாவில் இணைக்கப்பட வேண்டும் என தெலுங்கானா அரசு கேட்டுக்கொண்டே உள்ளது. ஆனால் ஆந்திர அரசு இதனை ஏற்பதாக இல்லை. இந்தப் பிரச்சினையும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.  அதில், 

நமது இரு மாநிலங்களுக்கு இடையிலான அனைத்து பிரச்சினைகளையும் சுமுகமாக பேசி தீர்த்துக் கொள்ளலாம். வரும் 6-ம் தேதி ஐதராபாத்தில் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை செய்யவும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். சந்திரபாபுவின் இந்த நடவடிக்கையை அரசியல் வட்டாரங்கள் வரவேற்றுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து