முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: கஜகஸ்தான் சென்றடைந்த அதிபர்கள் புடின், ஜி ஜின்பிங்

புதன்கிழமை, 3 ஜூலை 2024      உலகம்
Putin--Xi-Jinping 2024-07-0

அஸ்டானா, கஜகஸ்தான்  நாட்டின் அஸ்டானா நகரில் நேற்று முதல் 2 நாட்களுக்கு ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்ய அதிபர் புடின் மற்றும்  சீன அதிபர் ஜி ஜின் பிங்  கஜகஸ்தான் நாட்டுக்கு சென்றடைந்துள்ளனர்.  

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடானது கடந்த 2001-ம் ஆண்டு ரஷியயா மற்றும் சீனவின் முன்முயற்சியால்  மத்திய ஆசிய நாடுகளின் பாதுகாப்பைக் குறித்து ஆலோசித்து உறுதி செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும். 

இந்தியா, பாகிஸ்தான், ஈரான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள்  ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் இடப்பெற்றுள்ளது. மேலும் துருக்கி, சவுதி அரேபியா, எகிப்து ஆகிய நாடுகளும் இந்த  ஷாங்காய் கூட்டமைப்பு  ஆலோசனைகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறது.

இந்த வருட மாநாட்டில் கூட்டமைப்பில் உள்ள மற்றைய நாடுகளின் அதிபர்கள் தலைவர்கள் பங்கேற்கும் நிலையில்  பிரதமர் மோடி பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் மாநாட்டில் பங்கேற்க கஜகஸ்தான் சென்றுள்ளார். 

 இந்த மாநாட்டை ரஷ்ய அதிபர் புடின் முன்னெடுத்துச் செல்வார் என்று  அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சீன அதிபர் ஜீ ஜின் பிங்கும் இந்த மாநாட்டை மத்திய ஆசியாவில் சீனாவை பிரதானப்படுத்தும் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வார் என்று தெரிகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து