முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் : கோட்டூர்புரம் போலீசார் விசாரணை

புதன்கிழமை, 3 ஜூலை 2024      தமிழகம்
Anna-University 1

Source: provided

சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை கோட்டூர்புரம் போலீசார் தேடி வருகின்றனர். 

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தின் 44வது பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் கல்லூரி வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நடந்தது. இதனால் நேற்று முன்தினம் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. 

இதற்கிடையே பல்கலைக் கழகத்திற்கு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில் இன்னும் சற்று நேரத்தில் வெடி குண்டு வெடிக்கும் என்றும், முடிந்தால் காப்பாற்றி கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

உடனே சம்பவம் குறித்து பல்கலைக் கழக ஊழியர்கள் கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழக்க செய்யும் நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் பல்கலைக் கழக வளாகம் முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு சோதனை நடத்தினர். 

பல மணி நேரம் நடந்த சோதனைக்கு பிறகு இது வெறும் புரளி என தெரியவந்தது. அதை தொடர்ந்து பல்கலைக் கழக மின்னஞ்சலுக்கு வெடி குண்டு மிட்டல் விடுத்த மின்னஞ்சல் முகவரியை வைத்து கோட்டூர்புரம் போலீசார் சைபர் கிரைம் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அண்ணா பல்கலைக் கழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து