முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி: தமிழக வீரர் உள்ளிட்ட 3 பேருக்கு இடம்

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2024      விளையாட்டு
INDIA -2024-07-02

Source: provided

மும்பை : இந்தியா மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளன. இந்த தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த இடது கை பேட்ஸ்மேன் சாய் சுதர்ஷன் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

ஐந்து போட்டிகள்...

ஜிம்பாப்வேயில் நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையின் கீழ் ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார், ரியான் பரக் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற அணியிலிருந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஆகியோர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். 

புறப்பட்டு சென்றது...

மேலும், உலகக் கோப்பைத் தொடருக்கான ரிசர்வ் வீரர்களான ரிங்கு சிங், கலீல் அகமது ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணியில், ருதுராஜ் கெய்க்வாட், துருவ் ஜுரேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இந்திய அணி ஜிம்பாப்வே-க்கு புறப்பட்டு சென்றுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களை பி.சி.சி.ஐ. தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

6-ம் தேதி முதல்...

இந்த தொடர் வரும் 6-ம் தேதி முதல் 14-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி மாலை 4.30 மணி அளவில் தொடங்குகிறது. இளம் வீரர் ஷுப்மன் கில் தலைமையிலான இந்த தொடருக்கான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்று இருந்த சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிவம் துபே ஆகியோர் மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ளனர். அவர்கள் டி20 உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்று இருந்தனர். புயல் காரணமாக அவர்கள் ஜிம்பாப்வே சென்றுள்ள அணியுடன் இணைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பி.சி.சி.ஐ. அறிவிப்பு... 

இந்நிலையில், அவர்களுக்கு மாற்றாக முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கான அணியில் சாய் சுதர்ஷன், ஜிதேஷ் சர்மா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கான இந்திய அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே, சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்) , ஹர்ஷித் ராணா.

சாய் சுதர்ஷன்: 

22 வயதான சாய் சுதர்ஷன், இந்திய அணிக்காக மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில் இந்திய அணிக்காக அறிமுக வீரராக களம் கண்டார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான அந்த தொடரில் 127 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டு அரைசதங்கள் அடங்கும். முதல் போட்டியில் 55 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் கிரிக்கெட் மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து