முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: மணீஸ் சிசோடியா, கவிதாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

புதன்கிழமை, 3 ஜூலை 2024      இந்தியா
Manish 2023-04-06

புது டெல்லி, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஸ் சிசோடியா மற்றும் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளுமான காவிதாவின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி மாநிலத்திற்கு புதிய மதுபான கொள்கை கொண்டுவந்தது. தனியார் மதுபான நிறுவனங்களுக்கு ஆதரவாக மதுபான கொள்கைகள்   குற்றச்சாட்டு தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கத்துறையினர் பணமோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, சவுத் குரூப் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியாக தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவின் மகளான எம்.எல்.ஏ. கவிதா செயல்பட்டு வருகிறார். 

இதையடுத்து, டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் எம்.எல்.ஏ. கவிதாவை கடந்த மார்ச் 15-ம் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்ட கவிதாவை சி.பி.ஐ. அதிகாரிகளும் கைது செய்தனர்.

அதே வேளை, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு மார்ச் 9-ம் தேதி அமலாக்கத்துறை எற்கனவே கைது செய்துள்ளது. 

மணீஷ் சிசோடியாவும், கவிதாவும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, இருவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி அவ்வப்போது கோர்ட்டில் மனு தாக்கல் செய்து வருகின்றனர். அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக பதியப்பட்ட பணமோசடி வழக்கில் கவிதா மற்றும் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நேற்றுடன் நிறைவடைந்தது. 

இதையடுத்து, திகார் சிறையில் இருந்தவாறு இருவரும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் டெல்லி  சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, பணமோசடி வழக்கில் கவிதா மற்றும் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை வரும் 25-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து