முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்த பயங்கரம்: வழிபாட்டு கூட்ட நெரிசலில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி : விரிவான விசாரணைக்கு மாநில அரசு உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2024      இந்தியா
UP 2024-07-02

Source: provided

ஹாத்ரஸ் : உத்தரப்பிரதேசத்தில் வழிபாட்டு கூட்ட நெரிசலில் சிக்கி 120 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிதுள்ள உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

சத்சங்கம் நிகழ்ச்சி... 

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் நேற்று இந்து மத சத்சங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்து மக்கள் புறப்பட்டபோது கடும் நெரிசல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் முண்டியடித்து சென்றபோது பலர் கீழே விழுந்தனர். 

பலி மேலும் உயர...

நெரிசலில் சிக்கி பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெண்கள் அதிகம். மேலும் இந்த சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிலருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

இரங்கல்-நிவாரணம்...

இந்த துயர சம்பவம் குறித்து வேதனை தெரிவித்த முதல்வர் யோகி ஆதித்யநாத், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக கூறி உள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அங்கு சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுதொடர்பாக விரிவான விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார். இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 4 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 5 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து