முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காசாவில் அடுக்குமாடி குடியிருப்பு மீது குண்டு வீசி இஸ்ரேல் தாக்குதல் பாலஸ்தீனர்கள் 12 பேர் பலி

புதன்கிழமை, 3 ஜூலை 2024      உலகம்
Gaza 2024-07-03

காசா, மத்திய காசாவில் அடுக்குமாடி குடியிருப்பு மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 12 பாலஸ்தீனியர்கள் பலியாகினர். 

காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், ஹமாஸ் அமைப்பினருடன் அப்பாவி பாலஸ்தீனர்களும் பலியாகின்றனர். 

அவ்வகையில், நேற்று முன்தினம் மத்திய காசாவில்  இஸ்ரேல் படைகள் வான் தாக்குதல் நடத்தின. டேர் அல்-பலாஹ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடம் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி தாக்கியதில் அங்கு வசித்த 12 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஆனால் இந்த தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. அதே சமயம்,  வடக்கு காசாவின் ஷெஜையா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள், தெற்கு காசாவின் ரபா, மத்திய காசா ஆகிய பகுதிகளில் ராணுவ நடவடிக்கை தொடர்வதாக இஸ்ரேல் ராணுவம்  செய்தி வெளியிட்டுள்ளது. 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சண்டை தொடங்கியதில் இருந்து இதுவரை காசாவில் 37,925 பேர் இறந்திருப்பதாக காசாவின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து