முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்சபா கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருந்தது : சபாநாயகர் ஓம் பிர்லா பெருமிதம்

புதன்கிழமை, 3 ஜூலை 2024      இந்தியா
Om-Birla 2023 07 25

Source: provided

புதுடில்லி : 18-வது லோக்சபாவின் முதல் கூட்டத்தொடர் 103 சதவீதம் ஆக்கப்பூர்வமானதாக இருந்தது என சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார்.

18 வது லோக்சபா அமைக்கப்பட்டதும் அதன் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24ல் துவங்கி தற்போது நிறைவு பெற்றது. கடந்த 27-ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். இதன் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி நேற்று முன்தினம் மக்களவையில் பதிலளித்தார். நேற்று மாநிலங்களவையில் பதிலளித்தார்.

இது தொடர்பாக சபாநாயகர் ஓம்பிர்லா சார்பில், லோக்சபா செயலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: லோக்சபா கூட்டத்தொடர் 103 சதவீதம் ஆக்கப்பூர்வமானதாக இருந்தது. 34 மணி நேரம் 7 அமர்வுகளாக நடந்தது. ஜூன் 26 -ல் சபாநாயகராக ஓம்பிர்லா தேர்வு செய்யப்பட்டார். இதற்காக அனைத்து எம்.பி.,க்களுக்கும் . அன்றைய தினம் அமைச்சர்களை, பிரதமர் மோடி லோக்சபாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த கூட்டத்தொடரில் 539 எம்.பி.,க்கள் பதவியேற்றுக்கொண்டனர். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் 68 உறுப்பினர்கள் பேசினர். 18 மணி நேரம் இந்த விவாதம் நீடித்தது. 377 வது விதியின் கீழ் 41 விவகாரங்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. 73ஏ விதியின் கீழ் 3 அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டதுடன், 338 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து