முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தி.மு.க. மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம்

புதன்கிழமை, 3 ஜூலை 2024      தமிழகம்
RS-Bharati 2023 04 14

Source: provided

சென்னை : நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னையில் நேற்று தி.மு.க. மாணவரணி சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சட்டசபையில் கடந்த 28-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி  தி.மு.க. மாணவரணி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சென்னை வள்ளுவர் கோட்டத்தில்  நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ,மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த  ஆர்.எஸ்.பாரதி, நீட் தேர்வுக்கு எதிராக ஒரு காலத்தில் தி.மு.க. மட்டுமே பேசிக் கொண்டிருந்தது. இன்று அனைத்துக்கட்சிகளும், ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்க்க ஆரம்பித்துள்ளது. நிச்சயமாக மாற்றம் வரும்என தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து