முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாதனை படைத்த 2024 - டி-20 உலகக்கோப்பை

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2024      விளையாட்டு
INDIA 2024-06-21

Source: provided

2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் 1- ந் தேதி தொடங்கி ஜூலை 29-ந் தேதி முடிவடைந்தது. இதில் இறுதிபோட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதியது. இந்த பரபரப்பான போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இந்த 2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் பல சாதனைகள் படைக்கப்பட்டது. நியூசிலாந்து வீரர் பெர்குசன் 4 ஓவர்களையும் மெய்டன் ஓவர்களாக வீசினார். இந்த உலகக் கோப்பை அதிக பவுண்டரிகள் விளாசப்பட்டது. ஒரு டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரு வீரர் அதிக சிக்சர் அடித்தது இந்த உலகக் கோப்பையில் தான். அதிக சிக்சர் விளாசிய கிறிஸ் கெய்ல் சாதனையை அந்த அணி வீரரான பூரன் முறியடித்தார்.

அந்த வகையில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் இதுவரை இல்லாத அளவாக 44 மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டுள்ளன. 2007-ல் தொடங்கப்பட்ட டி20 உலக கோப்பை தொடர் முதல், 2024 ஆண்டு வரை 152 மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டுள்ளன. 2024-ம் ஆண்டு அதிகபட்சமாக 44 மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக 2012-ம் ஆண்டில் 21 மெய்டன்கள் வீசப்பட்டது. 2009-ம் ஆண்டில் வெறும் 5 மெய்டன்களே வீச்சப்பட்டது. ஒவ்வொரு டி20 உலகக் கோப்பை தொடரில் வீசப்பட்ட மெய்டன் ஓவர்கள் விவரம்:- 15 - 2007, 05 - 2009, 11 - 2010, 21 - 2012, 13 - 2014, 09 - 2016, 17 - 2021, 17 - 2022, 44 - 2024.

__________________________________________________________________________________________________

ஏன் விண்ணப்பிக்கவில்லை? - டிராவிட் குறித்து ஜெய்ஷா

17 வருடங்களுக்கு பிறகு டி20 உலகக் கோப்பை இந்திய அணி கைப்பற்றியது. பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரின் தலைமையில் கீழ் இந்திய அணி கோப்பை வென்று சாதித்தது. இந்நிலையில் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட் ஏன் விண்ணப்பிக்கவில்லை என்ற காரணத்தை ஜெய்ஷா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- குடும்பக் கடமைகள் காரணமாக அவர் விலக விரும்புவதாக தெரிவித்தார். அவருடைய முடிவை நாங்கள் மதிக்கிறோம். அவரை நீட்டிக்க நான் வற்புறுத்த விரும்பவில்லை.

ராகுல் பாய் கடந்த ஐந்தரை ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டுக்கு சேவை செய்துள்ளார். அவர் மூன்று ஆண்டுகள் தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநராக இருந்தார். பின்னர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக, அவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றினார். இந்த டி20 உலகக் கோப்பை பட்டத்தை வென்றதில் ரோகித் சர்மாவைப் போலவே ராகுல் டிராவிட்டின் பங்கும் முக்கியமானது. அவர் 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு அணியை அழைத்துச் சென்றார். ஆனால் அதில் தோலிவியடைந்தால் மீண்டும் பயிற்சியில் தொடர விரும்பினார். என்று அவர் கூறினார்.

__________________________________________________________________________________________________

விம்பிள்டன் டென்னிஸ்: வெளியேறிய சுமித் நாகல் 

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சுமித் நாகல், செர்பியாவின் மியோமிர் கெக்மனோவிக் உடன் மோதினார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-2 என்ற புள்ளிக்கணக்கில் மியோமிர் கெக்மனோவிக்கும், 2வது செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் சுமித் நாகலும் கைப்பற்றினர். இதையடுத்து நடைபெற்ற 3 மற்றும் 4வது செட்களை மியோமிர் கெக்மனோவிக் முறையே 6-3, 6-4 என்ற என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இதன் மூலம் இந்த ஆட்டத்தில் சுமித் நாகல் 2-6, 6-3, 3-6, 4-6 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி கண்டு முதல் சுற்றுடன் வெளியேறினார். 

__________________________________________________________________________________________________

யுவராஜ் சிங்கின் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி

ஐ.சி.சி. 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரில் மற்ற போட்டிகளில் சொதப்பிய விராட் கோலி முக்கியமான இறுதிப்போட்டியில், விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை நங்கூரமாக நிலைத்து நின்று காப்பாற்றினார். அதனால் இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆட்ட நாயகன் விருது வாங்கிய நிகழ்விலேயே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக ஓய்வை அறிவித்துள்ளார்.

விராட் கோலி ஏற்கனவே ஐ.சி.சி. வெள்ளைப்பந்து தொடர்களான 19- வயதுக்குட்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்களிலும் கோப்பைகளை வென்றுள்ளார். அந்த வரிசையில் தற்போது டி20 உலகக்கோப்பையையும் அவர் வென்றுள்ளார்.

இதன் வாயிலாக அண்டர்-19 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை, 20 ஓவர் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய அனைத்து வகையான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற வீரர் என்ற யுவராஜ் சிங்கின் மகத்தான சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். ஓய்வு பெறுவதற்குள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை மட்டும் கைப்பற்றினால் அனைத்து விதமான ஐ.சி.சி. கோப்பைகளையும் வென்ற ஒரே வீரர் என்ற உலக சாதனையை அவர் படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 4 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 5 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து