முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹத்ராஸ் சம்பவம்: மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்தித்து உ.பி. முதல்வர் நலம் விசாரிப்பு

புதன்கிழமை, 3 ஜூலை 2024      இந்தியா
Yogi 2024-07-03

Source: provided

லக்னோ : ஹத்ராஸ் மாவட்டத்தில் நிகழ்ந்த சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்தித்து அவர்களது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். 

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் நேற்று முன்தினம் இந்து மத ஆன்மிக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்து மக்கள் புறப்பட்ட போது கடும் நெரிசல் ஏற்பட்டது. 

ஒருவரையொருவர் முண்டியடித்து சென்றபோது பலர் கீழே விழுந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்தன்ர். மேலும் ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

மேலும் போலே பாபா சாமியார் நடத்திய இந்த ஆன்மிக நிகழ்ச்சியில் பலர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு திடீரென அவர் தலைமறைவானார். இவரை உத்தரப்பிரதேச போலீசார் தேடி வருகின்றனர். 

இந்நிலையில் ஹத்ராஸ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்களை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னார் மருத்துவர்களை சந்தித்து காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு கேட்டுகொண்டார் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து