முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் 7-வதாக மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்தது

புதன்கிழமை, 3 ஜூலை 2024      இந்தியா
Bihar 2024-07-03

 பாட்னா, பீகாரில் நேற்று  மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்தது. இங்கு கடந்த 15 நாட்களில் மட்டும் 7 பாலங்கள் இடிந்து விழுந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பீகாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவான் மாவட்டத்தில் உள்ள கண்காய் ஆற்றில் நேற்று பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. சமீபகாலமாக அங்கு கனமழை பெய்வதால், ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால், பாலத்தின் கட்டுமான சுவரில் விரிசல் ஏற்பட்டு, பாலம் இடிந்து விழுந்தது.

கடந்த 15 நாட்களில் பீகார் மாநிலத்தில் மட்டும் 7 பாலங்கள் இடிந்து விழுந்து உள்ளன. தொடர் கனமழையால், கிசான்கஞ்ச் மாவட்டத்தின் தாக்கூர் கஞ்ச் பகுதியில் பண்ட் ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று இடிந்து விழுந்தது.  

அதற்கு முன் கிழக்கு சம்கரன், அராரியா, சிவான், கிஷன்கஞ்ச், மதுபானி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்தன. இதன் காரணமாக, முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஆளும் அரசை, எதிர்க்கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருவதால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து