முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யானைகளுக்கான உணவகம் ஒடிசா சரணாலயத்தில் திறப்பு

புதன்கிழமை, 3 ஜூலை 2024      இந்தியா
Odisha 2024-07-03

புவனேஸ்வர், ஒடிசாவில் சந்தகா வனவிலங்கு  சரணலாயத்தில் யானைகளுக்கான உணவகம் திறக்கப்பட்டுள்ளது. 

ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வரின் வடமேற்கு பகுதியில் சந்தகா வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இது கடந்த 1982-ம் ஆண்டு டிசம்பரில் யானைகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. 

இந்த காப்பகத்தில் தற்போது யானைகளுக்காக ஒரு உணவகம் திறக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் யானைக் கூட்டத்தில் இருந்து பிரிந்த இளம் யானைகள் இந்த காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் காடுகளில் மதம் பிடித்த யானைகளை அடக்குவதற்காக பயன்படுத்தப்படும் கும்கி யானைகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது இந்த காப்பகத்தில் ஜகா, உமா, கார்த்திக், சந்து, மாமா மற்றும் சங்கர் என்ற பெயர் கொண்ட 6 யானைகளை 13 யானை பாகன்கள் மற்றும் உதவி பாகன்கள் பராமரித்து வருகின்றனர். இங்குள்ள யானைகளுக்காக வனத்துறை அதிகாரிகள் இந்த பிரத்யேக உணவகத்தை திறந்துள்ளனர். 

இது குறித்து தலைமை பாதுகாவலரான சுசந்தா நந்தா கூறியதாவது:-

யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் போது ஊட்டச்சத்து உணவு தேவைப்படுகிறது. இங்கு ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் யானைகளுக்கு உணவு அளிக்கப்படும்.  ஒவ்வொரு யானைக்கும் அவற்றின் பெயரில் ஒரு சாவடி உள்ளது. யானைகள் தங்களின் சாவடியை அடையாளம் காண பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றார். 

இங்கு பராமரிக்கப்படும் யானைகளுக்கு காலை உணவு 8.30 மணிக்கு வழங்கப்படுகிறது. பின்னர் நடைபயிற்சி, சிறிய அளவிலான உடற்பயிற்சி அளிக்கப்படுகிறது. பின்னர் வாழைப் பழம், தேங்காய், கேரட், கரும்பு மற்றும் தர்பூசணி பழங்கள் வழங்கப்படுகிறது. 

மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை ஒரு மணி நேரம் யானைகளின் குளியல் நேரம் ஆகும். அதன் பிறகு மதிய உணவாக கோதுமை, தினை, சோளப்பொடி, குதிரை வாலி, மஞ்சள், ஆமணக்கு எண்ணை மற்றும் உப்பு கலந்த வெள்ளம் வழங்கப்படுகிறது. 

இரவு உணவாக புல், மரக்கிளைகள், வாழைத்தண்டு, வைக்கோல் வழங்கப்படுவதாகவும் இந்த உணவகத்தில் இருந்து சிறிது தூரத்தில் யானைகள் ஓய்வெடுப்பதற்காக கொட்டத்தை அமைக்கப்பட்டுள்ளதாகவும் வனத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து