முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளி முதல் டாஸ்மாக் கடைகளில் ‘கட்டிங்’ அறிமுகம்

புதன்கிழமை, 3 ஜூலை 2024      தமிழகம்
Mathu 2023 06 27

Source: provided

சென்னை : தீபாவளியிலிருந்து ‘குடிமக்களின் குறை தீர்ப்பதற்காக’ மதுக் கடைகளில் 90 மி.லி. ’கட்டிங்’ மது பாட்டில்களை விற்க டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதற்கான அனுமதியையும் தமிழக அரசிடமிருந்து டாஸ்மாக் பெற்றுவிட்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, ஒருமுறை இதேபோல டெட்ரா பாக்கெட்களில் 90 மி.லி. அளவில் மது வகைகளை விற்கத் திட்டமிட்டுக் கடும் எதிர்ப்பு காரணமாகக் கைவிடப்பட்டது. ஆனால், இப்போது மீண்டும் பாக்கெட்டுக்குப் பதிலாக பாட்டிலில் விற்கும் முடிவுக்கு வந்துள்ள டாஸ்மாக் நிர்வாகம், தீபாவளி முதல் விற்பனையைத் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

டாஸ்மாக்கில் இருப்பதிலேயே குறைந்த விலை மது பாட்டில் தற்போது ரூ.140-க்கு விற்கப்பட்டு வரும் நிலையில், 90 மி.லி. மது பாட்டில்கள் ரூ. 80-க்கு விற்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மது உற்பத்தியாளர்களைச் சந்தித்த பின் இதுதொடர்பான முடிவை எடுக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக டாஸ்மாக்கில் மதுப் பிரியர்களில் ரூ.140-க்கு விற்கப்படும் குவாட்டர் (180 மி.லி.) பாட்டிலைக்கூட வாங்க முடியாத நிலையில் பலரும் இருப்பார்கள். இப்படி இருப்பவர்கள் கட்டிங் பிரித்துக் குடிக்க மதுக் கடைகளில் இன்னொரு ஆளைத் தேடுவதை கடை வாசல்களில் காண முடியும்.

தமிழக அரசு அறிமுகப்படுத்த இருக்கும் 90 மி.லி. ’கட்டிங்’ மது பாட்டில்கள் விற்பனைக்கு வந்த பிறகு, இனிமேல் குவாட்டர் வாங்க முடியாமல் காத்திருக்கும் மதுப் பிரியர்கள் பார்ட்னர்களைத் தேட வேண்டியிருக்காது. விற்பனையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, அருகிலுள்ள மாநிலங்களில் இதுபோன்ற குறைந்த அளவு மதுவை ‘டெட்ரா பாக்கெட்டுகளில்’ அடைத்து விற்பனை செய்து வருகின்றனர். ஆனால், தமிழக டாஸ்மாக் நிர்வாகம் மலிவான விலையில் பிளாஸ்டிக் பாட்டில்களில் வழங்க முடிவெடுத்துள்ளது 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து