முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சம்பய் சோரன் ராஜினாமா: ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்கண்ட் முதல்வராகிறார்

புதன்கிழமை, 3 ஜூலை 2024      இந்தியா
Hemant-Soran 2023-07-23

Source: provided

ராஞ்சி : முதல்வர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து , மோசடி வழக்கில் ஜாமினில் வெளியே வந்துள்ள ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார். 

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் முதல்வராக பதவி வகித்து வந்தார். சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து அவர், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது கட்சியை சேர்ந்த சம்பய் சோரன் முதல்வராக பதவியேற்றார். சில மாதங்களுக்கு பிறகு, ஜார்க்கண்ட் ஐகோர்ட் ஜாமின் வழங்கியதை தொடர்ந்து ஹேமந்த் சோரன் வெளியே வந்தார்.

இந்நிலையில், ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார். இதற்காக முதல்வர் சம்பய் சோரன் வீட்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் இண்டியா கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் குழு தலைவராக ஹேமந்த் சோரன் தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து சம்பய் சோரன் பதவியை ராஜினாமா செய்தார். பின்பு அவர் கவர்னரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். 

இதனிடையே, பதவி விலகிய சம்பய் சோரன் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் தான் அவமானப்படுத்தப்பட்டதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து அவரை சமாதானப்படுத்தும் வகையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிர்வாக தலைவர் பதவி அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து