முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை, நெல்லை மாநகராட்சியின் தி.மு.க.மேயர்கள் திடீர் ராஜினாமா

புதன்கிழமை, 3 ஜூலை 2024      தமிழகம்
Kalpana 2024-07-03

Source: provided

கோவை : ஒரே நாளில் தி.மு.க.வை சேர்ந்த கோவை மற்றும் நெல்லை மாநகராட்சியின் மேயர்கள் திடீர் ராஜினாமா செய்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

100 கவுன்சிலர்கள்... 

தமிழகத்தில் சென்னையை அடுத்து பெரிய மாநகராட்சியாக விளங்குவது கோவை மாநகராட்சி ஆகும். இந்த மாநகராட்சியில் மொத்தம் 100 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில் 97 பேர் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள். 3 பேர் மட்டும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள். கோவை மாநகராட்சி மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த கல்பனா ஆனந்த குமார் பதவி வகித்து வந்தார். இவர் மாநகராட்சி 19-வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனவர். இவரது கணவர் ஆனந்தகுமார் தி.மு.க.வில் பொறுப்புக்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

பல்வேறு புகார்கள்... 

மேயர் கல்பனா, பொறுப்பேற்றது முதலே அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தது. இதற்கு அவரது கணவர் ஆனந்தகுமாரின் அரசியல் தலையீடு காரணமாக கூறப்பட்டது. மேலும் தி.மு.க. கவுன்சிலர்கள் மட்டத்திலும், நிர்வாகிகள் மத்தியிலும் இவர் பெரிய அளவில் நம்பிக்கையை பெறவில்லை. இதனால் தி.மு.க. கவுன்சிலர்களே அவ்வப்போது தங்கள் எதிர்ப்பை காட்டி வந்தனர். 

முதல் பெண் மேயர்...

இந்தநிலையில் மேயர் கல்பனா தனது மேயர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும், இதுதொடர்பான கடிதத்தை அவர் தி.மு.க. மேலிடத்துக்கு அனுப்பிவிட்டதாகவும் கோவை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில், கோவை மாநகராட்சி மேயர் பதவியில் இருந்து தி.மு.க.,வை சேர்ந்த கல்பனா ராஜினாமா செய்துள்ளார். கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரகாரனிடம் ராஜினாமா கடிதத்தை மேயர் கல்பனா வழங்கினார். கோவையின் முதல் பெண் மேயரான கல்பனா மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் அவர் பதவி விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நெல்லை மேயரும்...

இந்நிலையில் கோவை மேயர் கல்பனாவைத் தொடர்ந்து நெல்லை மேயர் சரவணனும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நெல்லை மாநகராட்சியில் தி.மு.க. மேயராக இருந்து வருபவர் பி.எம்.சரவணன். இவரது தலைமையில் மாநகராட்சி கூட்டம் நடத்துவதில் ஒவ்வொரு மாதமும் பிரச்சினைகள் நிலவி வந்தது. சமீபத்தில் மாநகராட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில் தி.மு.க. கவுன்சிலர்களே போதிய எண்ணிக்கையில் கலந்து கொள்ளாததால் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

திடீர் ராஜினாமா...

இந்த சூழலில் நேற்று முன்தினம் மேயர் பி.எம்.சரவணன் சென்னைக்கு சென்று இருப்பதாகவும், அங்கு கட்சி தலைமையிடம் தனது பதவியை ராஜினாமா செய்வதற்குரிய கடிதத்தை வழங்கி இருப்பதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் நெல்லை மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் இருவர்...

கோவை மற்றும் நெல்லை மேயர்கள் மீதும் தொடர்ச்சியாக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு எழுப்பி வந்தநிலையில் இருவரும் ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் தி.மு.க.வை சேர்ந்த இரண்டு மேயர்கள் பதவி விலகியது அரசியல் வட்டாரங்களில் பேசுப்பொருளாகி உள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து