முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய சட்டங்களின் பெயருக்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

புதன்கிழமை, 3 ஜூலை 2024      தமிழகம்
Chennai-high-court2

Source: provided

சென்னை : 3 குற்றவியல் சட்டங்களின் பெயர்களை மாற்ற உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழியில் வைக்கப்பட்ட பெயர்களை அரசியலமைப்புக்கு எதிரானது எனத் தெரிவித்து ஆங்கிலத்தில் மாற்ற மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்யன் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நாட்டில் 9 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் மட்டுமே ஹிந்தி அலுவல் மொழியாக உள்ளதாகவும் 56.37 சதவிகித இந்தியர்களுக்கு ஹிந்தி தாய் மொழி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. புதிய குற்றவியல் சட்டங்கள் அரசியலமைப்பு விதிகளை மீறவில்லை என்றும் யாருடைய அடிப்படை உரிமையையும் மீறவில்லை என்றும் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், சட்டங்களுக்கு பெயரிடும் விவகாரம் பாராளுமன்றத்தின் முடிவு என்றும் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மத்திய அரசுத் தரப்பில் விரிவான பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து